திறந்த நிலை கல்வி

யார் வேண்டுமென்னாலும், எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடும், தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகம் 2002ஆம் ஆண்டு தமிழக அரசால் நிறுவப்பட்டது. அதனுடைய தோற்ற காலத்திலிருந்து சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் உள்ளவர்களுக்கும், கல்வி கற்பதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த 14 ஆண்டுகளாக இந்தப் பல்கலைக்க கழகத்தினுடைய வளர்ச்சி பாராட்டும் வண்ணமாக இருக்கிறது

கடந்த 14 ஆண்டுகளாக இந்தப் பல்கலைக்கழகத்தினுடைய வளர்ச்சி மிகவும் பாராட்டும் வண்ணமாக அமைந்துள்ளது. மாநிலம் முழுவதுமாக பல்வேறு பாடங்களில் 113 பாடத்திட்டங்கள் மூலமாகவும், 13 கல்வி சிறுவனங்களின் வழியாகவும், 5 துணை நிறுவனங்களின் வழியாகவும், ஒரு ஊடக மையம் வழியாகவும், 607 கற்பவர்கள் சேவை மையம் மூலமாகவும் 5,29,263 மாணவர்கள் பயன்பெறும் வண்ணமாகக் கல்வி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2003ஆம் ஆண்டிலிருந்ததே. முதன் முதலாக மதிப்பீடு முறையில் பாடக்குறிப்புகள் தயார்செய்து அறிமுகம்படுத்திய பெருமை தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தையே சாரும்.

வருடம் முழுவதும் அனுமதி அளிக்கும் முறை மற்றும் மாணவர்கள் வசதியைக் கருத்தில் கொண்டு வார இறுதி நட்களில் தேர்வு நடத்தும் முறை, தொடர்ச்சியாக மாணவர்களுடைய திறனை மதிப்பீடு செய்யும் முறை, ஆகியவற்றின் மூலமாகத்தரம் வாய்ந்த கல்வியை மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் விதமாக வழிவகை செய்யப்படுகிறது. இவ்விதமாகக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக இப்பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மாணவர்களுடைய அனுமதி, மற்றும் தேர்வு பற்றிய விவரங்கள், பாடக்குறிப்பேடுகள் அளிக்கும் முறை, கல்வி ஆலோசனை ஆகியவையெல்லாம் கணனி மயமாக்கப் பட்டுள்ளன. இதுவரை 1,71,430 மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2015-2016 கல்வியாண்டின் புள்ளிவிவரம்படி 29351 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டும் மற்றும் 65 பேராசிரியர்களும் 77 மற்ற பணியாளர்களும் இப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றி மாணவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். நாடு முழுவதிலுமுள்ள 15 திறந்தவெளிப் பல்கலைக்கழங்களில் தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகம் தன்னிகரற்ற பல்கலைக் கழகமாகத் திகழ்கிறது. பல்கலைக்கழக விதி 12இன்படி இப்பல்கலைக்கழகத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தொலைத்தூரக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தும் படியாக, அனுமதி வழங்கப்பட்ட நாட்டிலுள்ள ஒருசில பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு திறந்தவெளிப்பல்கலைக்கழகமும் ஒன்று என்ற பெருமை படைத்ததாகும்

1. B.A. Tamil
2. B.A. Functional Tamil
3. B.Lit.,
4. B.A. History
5. B.A. English
6. B.A. English and Communication
7. B.A. Political Science
8. B.A. Economics
9. B.A. Public Administration
10. B.A. History and Heritage Management
11. B.A. Tourism and Travel Studies
12. B.A. Business Economics
13. B.A. Sociology
14. B.A. Social Work
15. B.A. Urdu
16. B.A. Criminology and Criminal Justice Administration
17. B.A. Human Rights
18. B.Sc. Mathematics
19. B.Sc. Maths with Computer Application
20. B.Sc. Psychology
21. B.Sc. Geography
22. B.Sc. Computer Science
23. B.C.A.
24. B.Sc. Apparel and Fashion Design
25. B.Com.
26. B.Com. Bank Management
27. B.Com. Corporate Secretaryship
28. B.Com. Accounting and Finance
29. B.Com. Computer Application
30. B.B.A.
31. B.B.A. Computer Applications
32. B.B.A. Marketing Management
33. B.B.A. Retail Management
34. M.C.A.
35. M.B.A.
36. M.A. History
37. M.A. English
38. M.A. Political Science
39. M.A. Economics
40. M.A. Public Administration
41. M.A. Tamil
42. M.A. Tourism and Travel Studies
43. M.A. Sociology
44. M.A. Social Work
45. M.A. Criminology and Criminal Justice Administration
46. M.A. Women Studies
47. M.Sc. Mathematics
48. M.Sc. Psychology
49. M.Sc. Computer Science
50. M.Com.
51. M.A. Police Administration
52. M.A. International Relations
53. M.A. Anthropology
54. M.A. Gender Studies
55. M.A. Linguistics
56. M.A. Translation Studies
57. M.A. Human Rights
58. M.A. Development Administration
59. M.Sc. Geography
60. M.Sc., Apparel and Fashion Design
61. Diploma in Media Art
62. Diploma in Management
63. Diploma in Databases
64. Diploma in Retail Management
65. Diploma in Archaeology and Epigraphy
66. Diploma in Museology and Conservation
67. Diploma in Data Sciences and Big Data Analysis
68. Diploma in Cloud Computing
69. Post Graduate Diploma in Applied Mathematics
70. Post Graduate in Diploma in Computer Applications
71. Post Graduate in Diploma in Gerontology
72. Post Graduate in Diploma in Guidance and Counselling
73. Post Graduate in Diploma in Information Tech. Management
74. Post Graduate in Diploma in Social Welfare Administration
75. Post Graduate in Diploma in Spoken English
76. Post Graduate in Diploma in Tamil Research Methodology
77. Certificate in NGO Management
78. Bachelor Preparatory Programme