தமிழ் இசைக் கல்லூரி : தோற்றம் : 1944
1944 சனவரி, இருபத்து மூன்றாம் நாள் சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் சார்பாகத் தமிழ் இசை மாலை நேர கல்லூரி தொடங்கப்பெற்றது.
பகல் நேரக் கல்லூரி 1995-ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்றது.
தமிழ் இசைக் கல்லூரி தமிழ்நாடு அரசு அங்கீகாரம், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் இணைப்புப் பெற்றது.
பகல் நேர இசைக் கல்லூரியில் இளங்கலை இசை (B.A.Music), முதுகலை இசை (M.A.Music), குரலிசை, வீணை, வயலின், புல்லாங்குழல், நாகசுரம், தவில், பரதநாட்டியம், நட்டுவாங்கம், 'இசை ஆசிரியர் பயிற்சி' ஆகிய துறைகளில் பட்ட மற்றும் பட்டயங்களுக்குரிய வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
மாலை நேரக் கல்லூரியில் கர்நாடக இசைக்கலைச் சான்றிதழ், இசைச்செல்வம், இசைமணி ஆகிய படிப்புகளில் குரலிசை, வயலின், பரதநாட்டியம் ஆகிய துறைகளிலும் மாணவ, மாணவியர் தமிழ் இசை பயின்று வருகின்றனர்.