தமிழின் தொன்மை, பண்பாடு, கலை, அறிவியல், சமூகம், சமயம், தத்துவம் ஆகியவற்றின் கடந்த கால வரலாற்றை முழுமையான ஆய்வுகளின் மூலம் அறிந்து நிகழ்கால வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் மக்கள் ஏற்றம் பெறுவதற்கும் நமது தாய்மொழி வளம் உலக மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடனும் தொடங்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மற்றொரு அங்கமாகத் தொலைநிலைக்கல்வி இய்க்ககம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கப்பெறறது. உலக மக்கள் தாய்மொழியில் அனைத்துப் பாடங்களையும் கற்று தங்களின் அறிவைப் பெருக்கி வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுதல் வேண்டும் என்ற வகையில் தாய்மொழியில் அனைவரும் கல்வியைப் பெறுதல் வேண்டும் என்ற உயரிய நோக்கில் தொலைநிலைக் கல்வித் திட்டம் அழைக்கப்பட்டது.
அத்தகைய சீரிய கல்விப் பணியைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடர்ந்து செய்து வருகின்றது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பெறும் தொலைநிலைக் கல்வித் திட்டங்ளுக்குப் ப்ல்கலைக்கழக நல்கைக் குழு மற்றும் புதுதில்லி தொலைநிலைக்கல்வி முதன்மை இயக்கத்தின் அங்கீகாரத்தை முழுமையாகப் பெற்ற பல்கலைக்கழகங்களில் முதன்மையான பல்கலைக்கழகமாக தமிழ்ப் பாடங்கள், தக்க அறிஞர்களின் வழிகாட்டலில் அமைக்கப்பட்ட கல்வி திட்டங்கள். மூலமாக மேற்கூறிய சீரிய நோக்கத்தில் தமிழ் இசைச்சங்கம், தமிழ் இசைக்கல்லூரி தமிழ் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் கற்றல் உதவி மையமாக செயல்படுகிறது
அனைத்துப்பாட வகுப்புகளும் தமிழிலேயே நடத்தப்படும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் தொலைநிலைக் கல்வி இயக்ககம் மூலம் ஒரே நேரத்தில் பட்டயம் (Diploma) அல்லது சான்றிதழ் (Certificate) வகுப்புகளில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது
முதுநிலை
(PG)
- தமிழ்
- தமிழிசை *
- பரதநாட்டியம் *
-
பட்டயம் (Diploma)(ஓராண்டு)
மற்றும் சான்றிதழ்(Certificate)
(6 மாதங்கள்)
- இசை *
- பரதநாட்டியம் *
- தொடு சிகிச்சை அறிவியல் * (Accupuncture Science)
- வள்ளலார் சிந்தனைகள்
- தமிழ்மொழி
- சுவடியியல்
- கோயிற்கட்டடக்கலை
- வரைகலை மற்றும் வண்ணக்கலை (Drawing and Painting)
- சுய உதவிக்குழு மேலாண்மை
- அக்குபஞ்சர் என்ற மருந்தில்லா மருத்துவம் (பட்டயம் மற்றும் சான்றிதழ்)
- கணிதவியலில் மனக்கணக்கும் கற்றலில் மூளை ஒருங்கிணைப்பும் (பட்டயம் மற்றும் சான்றிதழ்)
பட்டயம் (Diploma)
(ஓராண்டு)
- இசை ஆசிரியப் பயிற்சி *
- யோகா ஆசிரியப் பயிற்சி
- பரதநாட்டிய ஆசிரியப் பயிற்சி *
- நட்டுவாங்கம் (பட்டயம்) *
- மூலிகை அறிவியல்
- மூலிகை அழகுக்கலை
- கோயில் அர்ச்சகர்ப் பயிற்சி
- பேச்சுக்கலை
- இதழியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பு*
- கருவியிசை (வீணை, வயலின், புல்லாங்குழல், நாகசுவரம்)*
- கருவியிசை (மிருதங்கம், தவில்) *
- மலையாளம்
- தெலுங்கு
- கன்னடம்
- மரபுவழித் தமிழ் மருத்துவம்
- சோதிடவியல்
- மேடை நிகழ்ச்சித் தொகுப்பு (பட்டயம்)
சான்றிதழ் (Certificate)
(6 மாதங்கள்)
- நூலகம் மற்றும் தகவலறிவியல் (C.L.I.Sc.)
- தமிழ்ப் புலவர் பயிற்சி (T.P.T.)
- கருவி இசை (மிருதங்கம், தவில்) *
-
* இணைந்த கல்வித் திட்டங்களின் வழி நடத்தப்படும்
விண்ணப்பத்தை அஞ்சல்வழி பெற விரும்புவோர் Co-ordinator, Tamil Isai Sangam, Chennai – 600 108 என்னும் பெயரில் ரூ.200/=க்குச் சென்னையில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை எடுத்து அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களைக் கல்லூரி இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து உரிய விண்ணப்பக் கட்டணத்துடன் நேரடிச் சேர்க்கை பெறலாம்.
தொடர்புக்கு:
மைய ஒருங்கிணைப்பாளர்
தமிழ் இசைச்சங்கம், தமிழ் இசைக்கல்லூரி
இணைய முகவரி:
tamilisaisangam.in
tamilisaisangam@yahoo.in
தொலைபேசி:
044-2533 0350, 044-2534 1425