முன்னாள் முதல்வர்கள்

இராவ்பகதூர் டி. எம். சின்னையா பிள்ளை அவர்கள் தலைமையில், திவான்பகதூர் டி. எம். நாராயணசாமிப் பிள்ளை, திரு. மு. அ. சிதம்பரம், இசையரசு எம். எம். தண்டபாணி தேசிகர், பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார், பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி, திருப்பாம்புரம் டி.என். சாமிநாதப் பிள்ளை உள்ளிட்ட பலர், இக் கல்லூரியின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றனர்.

அரியக்குடி இராமனுச ஐயங்கார், திருவிடைமருதூர் பி.எஸ் வீருசாமி பிள்ளை. பாலக்காடு டி.எஸ். மணி ஐயர், பழநி எம். சுப்பிரமணியபிள்ளை, எம். எல். வசந்தகுமாரி, மதுரை எஸ். சோமசுந்திரம், டாக்டர் எஸ். இராமநாதன், சீர்காழி எஸ். கோவிந்தராசன், திரு. சி.எஸ். முருகபூபதி முதலிய இசைப்பேரறிஞர்களும், தமிழ் இசை மாலைக் கல்லூரியின் மதிப்பியல் முதல்வர்களாகப் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் இசைக் கல்லூரி தொடங்கிய காலத்தில் கிழ்வேளூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களும், பின்னர், தலைமை ஆசிரியர்களாகத் தஞ்சை க.பொ. கிரிஷ்ணமூர்த்தி பிள்ளை, சித்தூர் வி. இராமச்சந்திரன் ஆகியோரும் பணியாற்றினார். இவர்களைத் தொடர்ந்து திரு. த. சங்கரன் அவர்கள் மாலை நேர கல்லூரி இயக்குநராகப் பணியாற்றியதை அடுத்து, இசைப் பேரறிஞர் மீ.ப. சோமசுந்தரம் (சோமு) அவர்கள், மாலை நேர கல்லூரியின் இயக்குநராகப் பணியாற்றி வந்தார். பகல்/மாலை இசைக் கல்லூரிகளுக்கு, கலைமாமணி. இசைப்பேரறிஞர் பேராசிரியர், முனைவர் திருப்பாம்புரம் சோ. சண்முகசுந்தரம் அவர்கள் இயக்குநராகப் பணியாற்றி 18-05-2010 அன்று இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, பகல்/மாலை இசைக் கல்லூரிகளுக்கு இசையியல்-இசை ஆசிரியர் பயிற்சித்துறை, பேராசிரியர், கலைமாமணி சங்கீத வித்வான் இசைக்கலைச்செல்வர் டாக்டர் பி.டி. செல்லத்துரை (செ.ச) எம்.ஏ., பி.எட்., டிப்ளமா இன் மியூசிக், டி.லிட்., பி.எச்.டி., அவர்கள் பணியாற்றினார் . அவரே 1995-ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற பகல் நேரக் கல்லூரிக்கு முதல்வராகவும், 23-08-2010 முதல் இயக்குநராகவும்,மாலை நேரக் கல்லூரிக்கு கலைமாமணி வேதாரண்யம் வி.ஜி. பாலசுப்ரமணியம் அவர்கள் துணைமுதல்வராகவும் பணியாற்றினார்கள். 2008-2009 ஆம் கல்வியாண்டு முதல், பகல்/மாலை நேரக் கல்லூரிகளுக்கு டாக்டர் ஆ. சுமதி அவர்கள் பொறுப்பு முதல்வராகவும் 2010-2011 ஆம் ஆண்டு முதல் 2011-12 ஆம் ஆண்டு வரை முதல்வராகவும் பணியாற்றினார்கள். 2012-13 ஆம் ஆண்டு முதல் 2016 வரை முனைவர் லெட்சுமி பொதுவாள் அவர்கள் முதல்வர் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றினார்.

தற்போது 2016-17 முதல் முனைவர் வே. வே. மீனாட்சி அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.