நெடிய வரலாற்றினையுடைய தமிழிசை ஒரு சில நூற்றாண்டுகள் அருகிக் காணப்பட்ட நிலைகண்ட வள்ளல் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் தமிழிசை மீண்டும் ஆக்கம் பெறவேண்டும் எனக் கருதி மேற்கொண்ட முயற்சியே தமிழிசைச் சங்கத்திற்கு முதல் அங்கீகாரமெனக் கொள்ளலாம்.
அக்காலத் தமிழறிஞர்கள் - ஆர்வலர்கள், டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், டி.கே.சி., கல்கி, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை போன்ற பெருமக்களின் ஆர்வமும் ஆக்கமும் இச்சங்கத்தின் உயர்ந்த குறிக்கோளுக்கு உறுதுணையாக அமைந்தன.
தமிழக அரசின் சார்பில் நடைபெற்றுவரும் சென்னை இயல், இசை, நாடக மன்றமும், புதுடெல்லி சங்கீத் நாடக அகாடமி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சகமும் ஆற்றிவரும் உதவியும் சங்கத்தின் அங்கீகாரத்திற்குச் சான்றாவன.
தமிழக அமைச்சர்கள் பலருடைய பங்கேற்பு மட்டுமன்றி பாரதக் குடியரசின் முதல் தலைவர் பாபு ராஜெந்திர பிரசாத், இரண்டாவது தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஜாகீர் உசேன் டக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் போன்றவர்கள் வருகை தந்துள்ளனர்.
வருடந்தோரும் நிகழும் இசை விழாக்களுக்கும், சங்க முக்கிய நிகழ்வுகளுக்கும் வருகைத் தந்த சிறப்பு விருந்தினர்கள்
ஆண்டு | சிறப்பு விருந்தினர் |
---|---|
1943 - 1944 | டாக்டர். ராஜா சர் அண்ணாமலை செட்டியார் |
1943 - 1944 | திரு. பம்மல் சம்பந்த முதலியார் |
1943 - 1944 | திரு. டி.கே. சிதம்பரம் முதலியார் |
1944 - 1945 | திவான் பகதூர் தி.மூ. நாராயணசாமிப் பிள்ளை |
1944 - 1945 | சர். பி.டி. இராசன் |
1945 - 1946 | திரு. எம். இராதாகிருஷ்ணப் பிள்ளை |
1945 - 1946 | திருவாரூர் திரு. வி. கலியாணசுந்தர முதலியார் |
1946 - 1947 | இராவ்பகதூர் டி.எம். சின்னையாப் பிள்ளை |
1946 - 1947 | அமைச்சர் திரு.எம். பக்தவத்சலம் |
1947 - 1948 | கல்கி திரு.ரா. கிருட்டிணமூர்த்தி |
1947 - 1948 | அமைச்சர் திரு.டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார் |
1948 - 1949 | திரு.சி.எஸ். முத்துரங்க முதலியார் |
1948 - 1949 | முதல் அமைச்சர் ஓமந்தூர் திரு.பி.இராமசாமி ரெட்டியார் |
1949 - 1950 | திரு.எஸ். இராமசாமி நாயுடு |
1949 - 1950 | நாமக்கல் திரு.வே. இராமலிங்கம் பிள்ளை |
1949 - 1950 | கவியோகி திரு. டி. சுத்தானந்த பாரதியார் |
1950 - 1951 | முதல் அமைச்சர் திரு.பி.எஸ். குமாரசாமி ராஜா |
1951 - 1952 | திரு.எஸ். நடேசப் பிள்ளை |
1952 - 1953 | முதல் அமைச்சர் திரு.சி.இராசகோபலாச்சாரியார் |
1953 - 1954 | அமைச்சர் திரு.சி. சுப்பிரமணியம் |
1954 - 1955 | முதல் அமைச்சர் திரு.கு. காமராஜ் |
1954 - 1955 | திரு.பி.எஸ். குமாரசாமி ராஜா |
1955 - 1956 | தவத்திரு குன்றக்குடி அடிகளார் |
1955 - 1956 | பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
1956 - 1957 | அமைச்சர் திரு.ஓ.வி. அளகேசன் |
1957 - 1958 | சட்டமன்றத் தலைவர் திரு.எம்.ஏ.மாணிக்கவேலு நாயகர் |
1958 - 1959 | அமைச்சர் திரு.எம். பக்தவத்சலம் |
1959 - 1960 | டாக்டர் சுப்புராயன் |
1960 - 1961 | அமைச்சர் திரு.எம். பக்தவத்சலம் |
1961 - 1962 | திருவாட்டி செளந்தரம் கைலாசம் |
1962 - 1963 | சட்டமன்றத் தலைவர் தி.செல்லபாண்டியன் |
1963 - 1964 | அமைச்சர் திரு.சி. சுப்பிரமணியம் |
1964 - 1965 | அமைச்சர் திரு. நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் |
1965 - 1966 | அமைச்சர் திரு.சே.பூவராகவன் |
1966 - 1967 | அமைச்சர் திரு.வி. இராமையா |
1967 - 1968 | திரு.சி. இராசகோபாலாச்சாரியார் |
1968 - 1969 | அமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி |
1969 - 1970 | அமைச்சர் திரு.கே.ஏ. மதியலகன் |
1970 - 1971 | ஐ.நா. அவைத் தலைமைச் செயலர் திரு.சி.வி. நரசிம்மன் |
1971 - 1972 | தமிழக ஆளுநர் கே.கே. ஷா |
1972 - 1973 | அமைச்சர் பேராசிரியர் திரு.க. அன்பழகன் |
1973 - 1974 | உயர்நீதிமன்ற நடுவர் திரு.பி.ஆர். கோகுலகிருஷ்ணன் |
1974 - 1975 | உயர்நீதிமன்ற நடுவர் திரு.எம்.எம். இஸ்மாயில் |
1975 - 1976 | அமைச்சர் திரு.க. இராசாராம் |
1976 - 1977 | தமிழக ஆளுநர் மோகன்லால் சுகாதியா |
1977 - 1978 | தமிழக முதல்வர் திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் |
1978 - 1979 | சட்டமன்ற மேலவைத் தலைவர் திரு.ம.பொ. சிவஞானம் |
1979 - 1980 | அமைச்சர் திரு.இராம. வீரப்பன் |
1980 - 1981 | டாக்டர் இரா. நெடுஞ்செழியன் |
1981 - 1982 | அமைச்சர் திரு.எஸ். இராமச்சந்திரன் |
1982 - 1983 | இணை அமைச்சர் திரு.ஆர்.வி. சாமிநாதன் |
1983 - 1984 | அமைச்சர் திரு.சி. அரங்கநாயகம் |
1984 - 1985 | தமிழக ஆளுநர் எஸ்.எல். குரானா |
1985 - 1986 | சிக்கிம் ஆளுநர் டி.வி.ராஜேஷ்வர் |
1986 - 1987 | திரு.ஜி.கருப்பைய மூப்பனார் |
1987 - 1988 | இணை அமைச்சர் ப.சிதம்பரம் |
1988 - 1989 | தமிழக ஆளுநர் மேதகு டாக்டர் பி.சி. அலெக்சாண்டர் |
1989 - 1990 | தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி |
1990 - 1991 | தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா |
1991 - 1992 | தமிழக ஆளுநர் மேதகு பீஷ்ம நாராயண் சிங் |
1992 - 1993 | மாண்புமிகு நிதி அமைச்சர் டாக்டர் இரா. நெடுஞ்செழியன் |
1993 - 1994 | தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா |
1994 - 1995 | டாக்டர் எம்.எஸ். சுப்புலட்சுமி |
1995 - 1996 | மாண்புமிகு திரு.கே.வி. தங்கபாலு |
1996 - 1997 | மாண்புமிகு நீதிபதி திரு.கே.எஸ். பக்தவத்சலம் |
1997 - 1998 | தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி |
1998 - 1999 | பத்ம விபூஷண் டாக்டர் செவாலியர் சிவாஜி கணேசன் |
1999 - 2000 | மாண்புமிகு வை.கோ. |
2000 - 2001 | வணக்கத்திற்குரிய மாநகர மேயர் திரு.மு.க. ஸ்டாலின் |
2001 - 2002 | தமிழறிஞர், பேராசிரியர் டாக்டர் அ.ச. ஞானசம்பந்தன் |
2002 - 2003 | பாரதக் குடியரசுத் தலைவர் மேன்மைதங்கிய டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் துல் கலாம் |
2003 - 2004 | தமிழக ஆளுநர் மேதகு பெ. ராமமோன் ராவ் |
2004 - 2005 | ரிசர்வ் வங்கி மற்றும் ஆந்திர மாநில முன்னாள் ஆளுநர் டாக்டர் சி. அரங்கராஜன் |
2005 - 2006 | தமிழக அளுநர் மேதகு திரு. சுர்ஜித் சிங் பர்னாலா |
2006 - 2007 | உத்தரப்பிரதேச அளுநர் மேதகு டி.வி. ராஜேஷ்வர் |
2007 - 2008 | பேரூர் ஆதீனம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் |
2008 - 2009 | திரு. இராம. வீரப்பன், தலைவர், சென்னை கம்பன் கழகம் |
2009 - 2010 | மாண்புமிகு நீதிபதி பி.சதாசிவம், உச்சநீதிமன்றம், புதுதில்லி குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் |
2010 - 2011 | மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் முனைவர் எஸ். ஜெகத்ரட்சகன் சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி.ந. ராமசந்திரன் |
2011 - 2012 | காவியக் கவிஞர் வாலி |
2012 - 2013 | உச்சநீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு எஃப்எம். இப்ராஹிம் கலிஃபுல்லா |
2013 - 2014 | ஜார்கண்ட மாநில முன்னாள் தலைமை நீதியரசர் மாண்புமிகு எம். கற்பகவிநாயகம் |
2014 - 2015 | சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு எஸ். நாகமுத்து |
2015 - 2016 | கவிப்பேரரசு வைரமுத்து |
2016 - 2017 | திரு.சண்முகநாதன் மேதகு ஆளுநர் |
2017 - 2018 | திரு.என்.ராம் தி இந்து நாளிதழ் |
2018 - 2019 | முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் திரு.இல.கணேசன் |