SiteMap
விண்ணப்ப படிவங்கள் (2016 - 2017)  

 
Top




1944 சனவரி 23ஆம் நாள் சென்னைத் தமிழ் இசைச் சங்கத்தின் சார்பாகத் தமிழ் இசைக்காக மாலைக் கல்லூரி தொடங்கப்பெற்றது. 1995ஆம் ஆண்டு முதல் பகல் கல்லூரியும் தொடங்கப்பெற்று சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 2007-2008 முதல் பி.மியூசிக் (குரலிசை)பட்டப்படிப்பு, 2011-2012 முதல் எம்.மியூசிக் (குரலிசை)பட்டமேற்படிப்பு சென்னைப் பல்கலைக் கழக இணைவு பெற்று நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியில் பல பிரபலமான கர்நாடக இசைக் கலைஞர்கள் பயின்று மேன்மையுற்றிருக்கிறார்கள்.

பகல் கல்லூரியில்

1. எம்.மியூசிக்.,
2. பி.மியூசிக்.,
3. இசைக்கலைமணி (குரலிசை)
4. வாத்தியக்கலைமணி (தவில்,நாகசுரம்)
5. இசைக்கலைமணி (வயலின், வீணை)
6. ஆடற்கலைமணி (பரதநாட்டியம்)
7. நட்டுவாங்கக்கலைமணி (நட்டுவாங்கம்)

வருகிற ஆண்டு முதல் தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தொலைநிலைக் கல்வி இயக்கத்தின் வாயிலாக இசை, நாட்டியம் மற்றும் கருவி இசை தொடர்பான பாடங்களை இணைந்த கல்வித் திட்டமாகச் செயற்படுத்துவதற்கு அங்கீகாரம் இந்த வருடம் முதல் பெறப்பட்டுள்ளது. இதில் கருவி இசையில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளும், கீ-போர்டில் பட்டயம், மற்றும் சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்பெறவுள்ளது.

வேலைவாய்ப்பு

இந்தக் கல்லூரியில் பட்டம் பட்டயம் பெற்ற மாணவர்கள் அனைவரும் இந்தியாவிலுள்ள அனைத்து இசைக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், இசைப் பள்ளிகளிலும், இசை ஆசிரியர்களாக, விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். பலர் அவரவர் சொந்த இசைப் பள்ளிகளும், நாட்டியப் பள்ளிகள் வைத்து நடத்திவருகிறார்கள். இதைத் தவிர மெல்லிசைக் குழுக்களில் ஏராளமான கச்சேரிகளும் செய்து வருகிறன்றனர்.

நூல் நிலையம்

மிகப் பழமையான நல்ல, இசைக் குறிப்புகளுடன் கூடிய புத்தகங்களும், பாரம்பரிய மிக்க தமிழ்ப் புத்தகங்களும், மிக மிகப் பிரபலமான இசை மேதைகளின், வாக்கேயக்காரர்களின் இசைக் குறிப்புகளுடன் கூடிய புத்தகங்களும், 2000த்துக்கும் மேற்பட்ட பலவகையான இசைப் புத்தகங்களும் கொண்டுள்ளது.

இசைக்கருவிகள்

பழைமையான தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பகுதியில் உள்ள பாரம்பரிய மிக்க பலவகையான இசைக்கருவிகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

விரிவுரையாளர்கள்

குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், பரதநாட்டியம், தவில், நாகசுரம் போன்ற துறைகளில் மிகச் சிறந்து விளங்கும் விரிவுரையாளர்களைக் கொண்டு சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படுகிறது.

வகுப்பறைகள்

  • மிகவும் காற்றோட்டமான வசதி
  • தனித்தனி இருக்கைகள்
  • மிக வெளிச்சமான இடம்


விண்ணப்பங்கள்


மேற்கண்ட கல்விப் படிப்பில் சேரவிரும்புபவர்கள் மே, 5ஆம் தேதி முதல் தமிழ் இசைக் கல்லூரி அலுவலகத்தில் வந்து விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

தொடர்பு தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள்:

அலுவலக தொலைபேசி எண்கள் - 044 -25330350, 25341425



விதிமுறைகளும் நிபந்தனைகளும் | Font Help | வலையக வடிவமைப்பு 1024 x 768 திரை பயன்பாட்டுக்கு | வலையக வடிவமைப்பு செர்ரிடெக் சொல்யூசன்ஸ் லிமிடெட்