முதல்வர்

பேராசிரியர், டாக்டர் வே.வெ.மீனாட்சி

பேராசிரியர், டாக்டர் வே.வெ.மீனாட்சி ஒரு இணை பேராசிரியர், விரிவுரையாளர் மற்றும் பகுதி நேர இசைக்கலைஞராக பல்வேறு திறன்களில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். அவர் பல பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டம் தயாரிக்கும் குழுவில் உறுப்பினராக உள்ளார். எம்.ஏ பயிலும் 12 மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார், 15 எம்.பில் ஆராய்ச்சி அறிஞர்கள், 4 முனைவர் ஆராய்ச்சி அறிஞர்கள் அவரது வழிகாட்டுதலின் கீழ் உள்ளனர். அவர் நான்கு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் விருது மற்றும் பாரதி சேவை செம்மல் விருது பெற்றவர், தற்போது சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதல்வராக தமிழ் இசை கல்லூரிக்கு தலைமை தாங்குகிறார்.


முனைவர். சு. சாரதா

முனைவர். சு. சாரதாபி.லிட்.,எம்.ஏ.,எம்ஃபில்.,பி.எச்டி. திருக்குறள்வை. மு. கோ.குறிப்புரை என்னும் தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி முனைவர் பட்டம் பெற்றவர். ஸ்ரீகன்யகாபரமேஸ்வரி மகளிர் கலைக்கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி என பல கல்லூரிகளில் பணியாற்றி தற்போது தமிழ் இசைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிபவர். தன் முனைவர் பட்ட ஆய்வேட்டினை நூலாகவும் வெளியிட்டுள்ளார். தேசிய, மாநில அளவிலான ஆய்வரங்கங்களில் கலந்துகொண்டு கட்டுரைகள் பலவழங்கியுள்ளார்.


முனைவர். லலிதா ஜவஹர்

முனைவர். லலிதா ஜவஹர் அவர்கள் ஆசார்ய கூடாமணி திரு. A. சுந்தரேசன் அவர்களின் நேரடி மாணவி. பின்னர் திருமதி. பாக்யலட்சுமி அம்மா அவர்களிடமும் பயின்றார். இவர் பாகவதர் குடும்பத்தில் பிறந்தவர்.இவர் இராணி மேரிக் கல்லூரியில் தனது முதுகலைப் பட்டத்திற்கு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் தனது முனைவர் பட்டத்தை 2013ம் ஆண்டில் இராணி மேரிக் கல்லூரி இசைத் துறையில் முழு நேர ஆய்வாளராக பயின்று தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவர் பல திரைப்படங்களிலும், பக்தி இசைத்தட்டுகளிலும் பின்னணி பாடகராகவும், பரதநாட்டிய அரங்கிசைக்கு முதன்மைப் பாடகராகவும் பாடிவருகின்றார். மேலும் இவர் சங்கம் கலாகுழு நடத்திய விழாவில் ‘சிறந்தபாடகி‘ – 2000 ‘SPB Cup’ வென்றுள்ளார்.இவருக்கு ’இசைசுடர்’ மற்றும் ‘கோகிலகான இசைவாணி‘ என்ற பட்டங்களும் வழங்கப்பெற்றுள்ளது.ஜனவரி 2013 கல்வியாண்டு தொடங்கி இன்று வரை தமிழ் இசைக் கல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்துவருகிறார். தற்போது தொல் இசைக்களஞ்சியம் அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராகவும் பணியாற்றிவருகிறார்.


மயிலை குருஜிநாகநாதன் தேசிகர்

மயிலை குருஜிநாகநாதன் 27 ஆண்டுகளாக அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவிலில் ஓதுவாராக இருந்து வருகிறார். அவர் இன்று வரை திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் ஓதுவார் ஆவார். அவர் 1998 முதல் அருள்மிகு நவசக்தி விநாயகர் கோயிலில் தேவார பாராயணம் செய்து வருகிறார். இந்து அறநிலையத்துறையின் கீழ் பல ஓதுவார்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். தேவார பண்ணிசைக்கு செய்த சேவைக்காக அவருக்கு பல பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் சில திருமுறை இசைமணி, பெரும்பாண நம்பி, கந்தர்வ வித்யாதர, தெய்வ தமிழிசை செல்வர், திருமுறை வித்தகர் போன்றவை ஆகும்.


ஸ்ரீ. S. சின்னனயா சிவகுமார்

ஸ்ரீ. S. சின்னனயா சிவகுமார் அவர்கள் இனை நாட்டிய பரம்பனரயில் பிறந்தவர். தஞ்னை நால்வர் எனப்படும் சின்னனயா, பபான்னனயா, சிவானந்தம், வடிவவலு ஆகிய நால்வரின் எட்டாவது தனலமுனறயில் வந்தவர். தனது தந்னதயார் ைங்கீத கலாநிதி திரு. K. P. சிவானந்தம் அவர்களிடமும், தாயார் வீனை விதூசி திருமதி. ைாரதா சிவானந்தம் அவர்களிடமும் பல ஆை் டுகள் வீனையும் வயலினும் நன்கு பயிற்சி பபற்றவர். 12 வருடங்களாக கும்பவகாைம் ராஜப்னபயா அவர்களிடம் மிருதங்கம் பயின் றார். பைன்னன அரசு இனைக்கல்லூரியிலும் அை் ைாமனல பல்கனலக் கழகத்தில் இனைத்துனறயிலும் பயின் றார். தமது முன் வனார்களின் பவளிவராத அரிய இனை நாட்டிய உருப்படிகனள மூன்று பாகங்களாக பதாகுத்து பவளியிட்டுள்ளார். சுமார் 20 வருடங்களாக பல மாைவ மாைவிகளுக்கு வீனையும் வயலினும் கற்பித்து இனைத்பதாை் டாற்றி வருகிறார்.


சிக்கல் பா. பாலசுப்பிரமணியன்.

சிக்கல் பா. பாலசுப்பிரமணியன். இவர் நீண்ட இசை பாரம்பரியம் மிக்கவர். இவர் தன் தந்தை கலைமாமனி திரு சிக்கல் ஆர். பாஸ்கரன், அவர்களிடம் வயலின் இசை பயின்று பிறகு இதன் நுட்பங்கள் சிலவற்றை வயலின் ஆசான்கள் திரு டி.என்.கிருஷ்ணன் மற்றும் வி.வி.சுப்பிரமணியம் அவர்களிடம் பயின்றிடும் வாய்ப்பை பெற்றவர். தமிழ் நாடு அரசு இசை கல்லூரியிலும், தஞ்சை, தமிழ் பல்கலைகழகத்திலும் பட்டங்கள் மற்றும் பட்டயங்கள் முடித்தவர். இவர் இந்த இசை துறையில் கடந்த முப்பது ஆண்டுகளாக, ஆசிரியர் மற்றும் இசைவானராக திகழ்கிறார். இசை சார்ந்த பல சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, அதன் வாயிலாக பல அனுபங்கள் பெற்றவர். தர்ப்போது இவர் , பெரும் மதிப்புக்குரிய அண்ணாமலை அரசரால் நிறுவப்பெற்ற “தமிழ் இசை கல்லூரியில்” வயலின் ஆசிரியர் பொருப்பில் இருக்கிறார்.


ஶ்ரீ.வெங்கட்டரமணன்

ஶ்ரீ.வெங்கட்டரமணன் இராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ் இசைக் கல்லூரியில் ( மாலை கல்லூரியில்) மிருதங்க பயின்றார் இசைச் செல்வம் மற்றும் இசைமணி பட்டம் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் D C A ( சன்னது கணினிப் பிரயோகம்) படித்துள்ளார் ஒன்பது வருட காலம், ஶ்ரீ விவேகானந்தர் வித்யாலையா (மேல் அயனம்பாக்கம்) பள்ளியில் மிருதங்க ஆசிரியராக பணிப்யாற்றிய பின் இப்போது தமிழ் இசை கல்லூரியில் 2014 ஆம் வருடம் முதல் இன்று வரைக்கும் மிருதங்கம் விரிவுரையாளராக பணிபுரிகிறார்


முனைவர் ஹிமஜா அதுல்குமார்

முனைவர் ஹிமஜா அதுல்குமார் கனைமாமணி முனைவர் உமா ஆைந்தின் மாணவி ஆவார்.இவர் ஆரம்பத்தில் பபராசிரியர் சுதாராணி ரகுபதி அவர்களிடம் இருந்து பரதநாட்டியத்தின் ஆரம்ப பயிற்சியினை பபற்றார்.இவர் 100 க்கு பமற்பட்ட தனி கனைநிகழ்ச்சிகனை வழங்கி பபருனம பேர்த்துள்ைார்.துர்தர்ஷனின் ஏ(A) தர கனைஞராை இவருக்கு பரதநாட்டியத்தில் மனிதவை பமம்பாட்டு அனமச்ேகம் இரண்டு ஆண்டுகள் உதவித்பதானக வழங்கியது. ஸ்ரீ தியாக பிரம்மாகை ேபாவிைால் 2017 ஆம் ஆண்டிற்காை வாணி கைா நிபுணா என்ற தனைப்பில் பகௌரவிக்கப்பட்டார்.இவர் கைடாவில் உள்ை பதானைதூர கற்றல் னமயத்தின் பரதநாட்டியம் இைநினை பட்ட படிப்பிற்காை அண்ணாமனை பல்கனைகழக பாடத்திட்டத்தின் எழுத்தாைர் ஆவார்.இவர் மதுனர கமராஜர் பல்கனைகழகத்தில் முனைவர் பட்டத்திற்காை ஆராய்ச்சியினை பமற்பகாண்டு முனைவர் பட்டம் பபற்றார்.இவர் நவம்பர் 2014 முதல் தமிழ் இனே கல்லூரியில் பணிபுரிந்து வருகின்றார்.


பெரியபாளையம் Dr.B.ராஜி.(விரிவுரையாளர்).

பெரியபாளையம் Dr.B.ராஜி.(விரிவுரையாளர்). பாலவாக்கம்,A.D.மணி அவர்களிடம் 5-ஆண்டு குருகுலவாசம் மற்றும் காளஸ்திரி K.நந்தகோபால் அவர்களிடம்,3-ஆண்டு குருகுலவாசம். தமிழ் இசைக்கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பட்டயம் பயின்றுள்ளேன்.(வாத்யவிசாரதா,2005-ம் வருடம்) தமிழ் இசைக்கல்லூரியில் இசைக்கலைமணி(குரலிசை)2008.ம் ஆண்டு மற்றும் முதுநிலை இசைக்கலைமணி(குரலிசை)2009-ம் ஆண்டுயில் பயின்றுள்ளேன். சென்னைப்பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகள்(B.MUSIC)பட்டம் பயின்றுள்ளேன்.(2007-வருடம்) அகில இந்திய வானொலியில்"B"high Grade-நாதஸ்வரத்தில் பெற்றுள்ளேன்(வருடம்.2011). GLOBLE PLACE UNIVERSITYயில் 2019-ஆண்டு DOCTORATE பட்டம் பெற்றுள்ளேன்


சிவன்வாயில் Dr.திரு.S.M.இராஜரத்தினம்(விரிவுரையாளர்).

சிவன்வாயில் Dr.திரு.S.M.இராஜரத்தினம்(விரிவுரையாளர்). கலைமாமணி வேதராண்யம் V.G..பாலசுப்பிரமணியன் அவர்களிடம் 4-வருடம் குரு குலவாசம் பயின்றார். தமிழ்இசைக்கல்லூரி மூன்று ஆண்டுகள் பட்டயம் பயின்றுள்ளேன்.(வாத்யவிஸ்சாரதா/2001-ம் ஆண்டு). இயல் இசை நாடகமன்றத்தில் ஓராண்டு சிறப்புப் பயிற்சி பயின்றுள்ளேன்.(2002-ம் ஆண்டு). தமிழ்நாடு அரசுயின் கலைப்பண்பாட்டுத்துறையில்'கலை வளர்மணி" பட்டம் பெற்றுள்ளேன்.(வருடம்,2005-06). அகில இந்திய வானொலியில் 'B'high Grade பெற்றுள்ளேன்.(வருடம்.2008). GLOBLE PLACE UNIVERSITYயில்,2019-ஆண்டு DOCTORATE பட்டம் பெற்றுள்ளேன்


எம். பி. ஸ்ரீமன்நாராயணன்(எம். ஏ. மியுசிக்)

எம். பி. ஸ்ரீமன்நாராயணன்(எம். ஏ. மியுசிக்) தமிழ் இசைக் கல்லூரி , இராஜா அண்ணாமலை மன்றத்தில்2011 ஆம் ஆண்டிலிருந்து இசை இயல்துறையில் துணைப்பேராசிரியராக பணியாற்றிவருகிறேன். மேலும் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைகழகத்தில் இரண்டு ஆண்டுகள் முதுகலை மாணவர்களுக்கு வருகை ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளேன் எம். பி. ஸ்ரீமன்நாராயணன்(எம். ஏ. மியுசிக்) தமிழ் இசைக் கல்லூரி , இராஜா அண்ணாமலை மன்றத்தில்2011 ஆம் ஆண்டிலிருந்து இசை இயல்துறையில் துணைப்பேராசிரியராக பணியாற்றிவருகிறேன். மேலும் தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைகழகத்தில் இரண்டு ஆண்டுகள் முதுகலை மாணவர்களுக்கு வருகை ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளேன்