SiteMap
புரவலர்கள்  

Top

தமிழ்நாட்டில் தமிழிசையே பெரிதும் முழங்க வேண்டுமென்ற குறிக்கோளுடன் 1936-ல் அண்ணாமலை நகரில் இசை மாநாட்டினைக் கூட்டிய அரசர் 1941-ல் நான்கு நாட்களுக்கு மீண்டும் முதல் மாநாடு ஒன்றைக் கூட்டி பின்னர் 1941-ல் திருச்சியில் தந்தை பெரியார் தலைமையில் ஒரு கூட்டத்தினையும், 1942-ல் தேவகோட்டை, காரைக்குடி, போன்ற நகரங்களிலும்் கூ ட்டங்கள் ஏற்பாடு செய்து இக்கூட்டங்களின் ஏகோபித்த கருத்தினை ஏற்று 23.12.43-ல் பெரியதொரு இசை மாநாட்டினை சென்னை செயிண்ட் மேரிஸ் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதன் விளைவாக தமிழிசைச் சங்கம் சென்னையில் நிறுவப்பெற்றது.

தமிழிசைச் சங்கத்தைத் தோற்றுவித்த அரசர் 1929-ல் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தினைத் தோற்றுவித்த செய்தி நாடறியும். இச்செயல் மிகப்பெரிய சாதனையாகும்.

தமிழிசைச் சங்கத்தினை 1943-ல் சென்னையில் தோற்றுவித்து இசைபரப்பும் பெருநோக்குடன் 1944-ல் ஒரு இசைக்கல்லூரினையும் சங்கத்தின் சார்பில் தோற்றுவித்தார்கள். அரசரின் ஆவல் "தமிழ் நாடெங்கும் தமிழிசை பரவ வேண்டுமென்பதே" தம் வாழ்நாள் முழுவதும் தமிழிசை மேலும் மேலும் பரவிய வண்ணம் இருக்க வேண்டுமென எண்ணிய அரசர் சங்கத்தின் நிர்வாகத்திலும் சன்மானம், இசை நூல்கள் வெளியிடுதல் போன்ற இனங்களில் பெரும் பொருளை வழங்கியுள்ளார்கள்.

தமிழிசை விழாக்கள் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாது கலந்து கொண்டு நிர்வாகித்த பெருந்தகையுமாவார்.

அன்னாரைப் போன்று அவர்களின் மூத்த மகனார் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களும் தொடர்ந்து சங்கத்தின் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பெருமகனார் ஆவார். சங்கம் தொடங்கிய நாள் முதல் தம் வாழ்நாள் முழுவதும் சங்கத்தின் துணைத்தலைவராகப் பணியாற்றிய சாதனையாளர்.

சங்கம் தொடங்கிய நாளிலிருந்து 1995 வரை அதன் மேம்பாடு கருதி 52 ஆண்டுகள் சங்கத்தின் மதிப்பியல் செயலராகப் பணியாற்றியவர் அரசர் அவர்களின் மூன்றாவது குமாரர் டாக்டர் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் அவர்கள். நிகழ்ச்சிகள் துவங்குவதிலும் நிறைவடைவதிலும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற கொள்கைப் பற்றுடைய பெருமகனார்.

1995-ல் தம் தந்தையார் அறிவுரையின் பேரில் சங்கத்தின் மதிப்பியல் செயலர் பதவியை ஏற்று திறம்பட நடத்தி வருபவர் டாக்டர் ஏ.சி.முத்தையா அவர்கள்.

சங்கத்தின் நிர்வாகத்திலும் கல்லூரியின் மேம்பாட்டிலும் ஊக்கத்துடன் செயல்படுபவர். கல்லூரியின் தரத்தினை மேலும் மேலும் உயர்த்த ஆக்கப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருபவர். கல்லூரியில் நாகசுரம், தவுல், தேவாரம் போன்ற துறையில் பயிலும் மாணவர்கட்குச் சலுகை பலவற்றை கல்லூரி தொடர்ந்து அளிக்க ஊக்குவிப்பவர்.

விதிமுறைகளும் நிபந்தனைகளும் | Font Help | வலையக வடிவமைப்பு 1024 x 768 திரை பயன்பாட்டுக்கு | வலையக வடிவமைப்பு செர்ரிடெக் சொல்யூசன்ஸ் லிமிடெட்