SiteMap
 நிகழ்ச்சிகள்  

nigalchigal
 

தமிழ் இசை எழுபத்து ஆறாம் ஆண்டு விழா:

செவ்விலக்கியங்களில் காணப்படும் பண்களுக்கான பயிற்சிப் பயிலரங்கம்:

பொங்கல் விழா:

தமிழ் நாட்டில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாகும். உத்தராயணம் தொடங்கும் நாள். உழைத்துக் களைத்த் உழவன் அறுவடையின் பயனைக்கண்டு மகிழும் நாள். மஞ்சளும், கரும்பும் எங்கும் நிறைந்து காணப்படும் திருநாளாகும். வாட்டி எடுத்த குளிர் நீங்கிக் கதிர்வணை உற்சாகமாக வரவேற்கும் நாள். மனைவி மக்களுடன் அறுசுவை உண்டு மகிழ்ந்திருத்தலன்றி விவசாயத்திற்கு ஊன்று கோலாக நின்ற மாடு கன்றுகளையும் போற்றும் நாள்.

மகிழ்ச்சிகரமான இந்நாளில் வயல் வரப்புகளையும் மாடு கன்றுகளையும் காணாத நகர்ப்புறவாசிகளுக்கு ஞாபகப்படுத்துவதற்காகவே இந்நாள் ஆட்டம் பாட்டு, நாட்டுப்புற இசை, மயிலாட்டம் ஒயிலாட்டம், கும்மி, கரகம்,பொய்க்கால்குதிரை போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்யப்படுகின்றது.இதனால் நாட்டுப்புறக் கலைகளில் சிறந்தவர்களுக்கு இந்நிகழ்ச்சி ஆதரவாக அமைகின்றது.

நால்வர் விழா:

nalvar

திருமுறைகளை நமக்களித்த நால்வர் பற்றிய வரலாறு மற்றும் அவர்களுடைய பாடல்களின் சிறப்பினைப் பெரியவர்களும், மாணவர்களும் அறியச் செய்ய வேண்டுமென்ற முயற்சியாகக் கடந்த பதினோறு ஆண்டுகளாக இவ்விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்பொழுதெல்லாம் இவ்விழாவினைத் தொடங்கிவைக்க ஓர் பேரறிஞர் சைவ மடாதிபதி போன்றவர்களை அழைத்தும் - நால்வர்களாகிய - ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற அருளாளர்களின் சிறப்பு மற்றும் அவர்கள் அருளிய பாடல்களின் வண்ணம் போன்றவற்றை விவரித்துச் சிறப்புரையாற்ற தமிழிலும், ஆன்மீகத்திலும் தோய்ந்த அறிஞர்களை அழைத்து உரையாற்றவும் ஏற்பாடாகியிருந்தது. அத்துடன் ஒவ்வொருவரின் வரலாற்றினை உரையாற்றி முடிந்தவுடன் அன்னாரின் பாடல்களை இசைவாணர்களைக்கொண்டு பழைய பண் முறையில் பாடவும் ஏற்பாடகியிருந்தது

இம்முறையில் சிறிது மாற்றம் செய்து தற்பொழுது ஒவ்வோராண்டும் ஒரு அருளாளரின் வாழ்க்கை வரலாறு, பாடல்களின் சிறப்பு குறித்த சிறப்புரையுடன் அன்னாரின் பாடல்களின் இசை நிகழ்ச்சியும் தொடர்ந்து நடைபெறச் செய்கின்றனர்.

ஆழ்வார்கள் விழா:

பன்னிருவர்களுடைய வரலாறு மற்றும் அவர்களுடைய அருளிச் செயல்களின் சிறப்பினை ஒரே நிகழ்ச்சியில் எடுத்துக் கூற இயலாதென்ற நிலையில்
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார் விழா ஓராண்டிலும்
குலசேகரர், தொண்டரடிப்பொடி, திருப்பாணாழ்வார் விழா அடுத்த ஆண்டிலும்
பெரியாழ்வார், மதுரகவியாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் அதற்கடுத்த ஆண்டிலும்
நம்மாழ்வார் விழா அடுத்த ஆண்டிலும் என்ற வரிசைத் தொடரில்

மேலே குறிப்பிட்ட ஆழ்வார்கள் வரலாறு பற்றியும் அருளிச் செயலின் சிறப்புகள் பற்றியும் அவர்களுடைய பாடல்களைப் பண்ணுடன் இசைத்துப் பாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆழ்வார்கள் விழாவினைத் தொடங்கிவைக்க வைணவ மடாதிபதி (ஜீயர்) யை அழைத்தும் ஆழ்வார்கள் பற்றிய சிறப்புரையாற்ற வைணவ அறிஞர்களை அழைத்தும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

அவ்வாறே திவ்வியப்பிரபந்தப் பாடல்களை அந்தந்த ஆழ்வார்களின் வரலாறு போன்ற சிறப்புரை நிகழ்ச்சிகட்குப் பிறகு இசையுடன் நடைபெறவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சில ஆண்டுகள் திவ்வியப்பிரபந்த பாடல்களை அடிப்படையாகக் கொண்டு நம் இசைக் கல்லூரி மாணாக்கியரின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

நால்வர் விழா, ஆழ்வார்கள் விழா காணவருவோருக்குக் கட்டணம் கிடையாது. இவ்விரு விழாக்களிலும் மன்றம் நிறைந்து - வழியும் அளவு மக்கள் திரள்.

தமிழ்ப்புத்தாண்டு விழா:

காலத்தைக் கணக்கிட நம் முன்னோர்களின் எற்பாடுகள் மிகச் சிறந்தன. வெவ்வேறு நாட்டினரும் மொழியினரும் அவரவர்களின் குறிக்கோளுக்கேற்ப காலத்தைக் கண்க்கிட்டு வருகின்றனர். நம் முன்னோர்கள் வான் நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு 60 ஆண்டுகள் - 12 மாதங்கள் - 365 நாட்கள் போன்று வரையறை செய்திருக்கின்றனர். இவ்வரையரை தான் மனிதனை ஏனைய உயிரினங்களினின்றும் தனித்துக்காட்டுவதாகும்.

வருஷம் - மாதம் - தேதி என்று இல்லாமல் நம்மால் இருக்க முடியுமா என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். கற்கால மனிதனாக இருந்தால் இந்த நாட்களும் மாதங்களும் தேவை இல்லாமல் இருக்கலாம். இரும்பு நாகரீகத்தையும் புறந்தள்ளி தற்பொழுது கணினி நாடகளில் வாழ்கின்றோம். இந்த நிலையில் ஒவ்வொரு நொடியும் இன்றியமையாதது அல்லவா. ஆகவேதன் ந்ம் பெரியவர்கள் வகுத்த பாதையில் நாம் புத்தாண்டினை மகிழ்ச்சியுடனும் - இசையுடனும் - ஆன்மீகத் துணையுடனும் கொண்டாடி வருகிறோம். மங்கல இசையை நம் மாணவ செல்வங்கள் வழங்கவும் ஆன்மீக இசையினை ஆண்டாண்டாக தருமபுரம் ப.சாமிநாதன் அவர்கள் வழங்கவும் வாழ்வில் அன்பும்,இன்பமும்,அமைதியும் நிறைய வேண்டி புத்தாண்டின் புலர் நாளில் விழா எடுக்கின்றோம்.

மார்கழி இசைவிழா:

தமிழ் இசை நாடெங்கும் பரவ வேண்டுமென்ற குறிக்கோளுக்கிணங்க தமிழ் இசைச் சங்கத்தின் ஆதரவில் டிசம்பர் 21 முதல் ஜனவரி 1 நிறைவாக 12 நாட்களுக்கு இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. தொடக்க நாளன்று தலைமை ஏற்க சிறந்த ஓர் அறிஞரை - மாநில ஆளுநரை - முதல் அமைச்சரை நடுவண் அமைச்சர் அல்லது குடியரசுத் தலைவர் போன்ற பெருமகனாரை வேண்டி அழைக்கிறோம்.

ஆண்டுதோறும் தகுதிமிக்க இசைக்கலைஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து இசைவிழா தொடக்க நாளன்று "இசைப்பேரறிஞர்" என்ற மதிப்புமிக்க விருதும் - பொற்பதக்கமும் வெள்ளிப் பேழையுடன் சான்றிதழும் - பொன்முடிப்பும் (ரூபாய் 10,000/-) விழாவினைத் தொடங்கிவைக்கும் பெருமகனாரைக் கொண்டு வழங்கப்படுகின்றது.வழங்கப்படுகின்றது.

பிரதி ஆண்டு நவம்பரில் க்ல்லூரியின் ஆதர்வில் நடைபெறும் இசைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கட்கு இசை விழா தொடக்க நாளில் - அவ்வாண்டு இசைப்பேரறிஞர் விருது பெறுபவரால் பரிசுகள் அளிக்கப்பெறுகின்றன

தேவாரம், திவ்வியப்பிரபந்தம் - வாய்ப்பாட்டு, நாகசுரம் மற்றும் இசைக் கருவி, பரதநாட்டியம், நாடகம் போன்று ஏறக்குறைய 40 நிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெறுகின்றன. இந்நிகழ்ச்சிகளில் இளைய கலைஞர்களுக்கும் நாகசுரம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் போதிய அளவு இடம் அளிக்கப்படுகிறது. இந்த 40 நிகழ்ச்சிகளில் 4 அல்லது 5 நிகழ்ச்சிகள் தவிர எஆனையவற்றிற்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. பங்கேற்கும் இசைக் கலைஞர்கட்கு நியாயமான சன்மானம் அளித்தும் ரசிகர்களிடம் கட்டணம் பெறாமல் நடத்தி வருவதற்கும் ஆதாரமாய் அமைவது சங்கத்தின் ஆர்வல்ர்கள் அளித்து வரும் மகத்தான் உதவியாகும்.

இசை விழாவின்போது வெளியிடும் தமிழ் இசை மலர் இசை மணம் பரப்பிவருவதகும். இசை பற்றிய அரிய கட்டுரைகளை தாங்கி வருவதுடன் முந்திய ஆண்டுகளில் சங்கத்தின் முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் நடப்பு ஆண்டு இசை நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களுடன் அழகிய முகப்பு அட்டையுடன் வெளியிடப்பட்டு வருகிறது.

விதிமுறைகளும் நிபந்தனைகளும் | Font Help | வலையக வடிவமைப்பு 1024 x 768 திரை பயன்பாட்டுக்கு | வலையக வடிவமைப்பு செர்ரிடெக் சொல்யூசன்ஸ் லிமிடெட்